செய்திகள்,முதன்மை செய்திகள் மைனஸ் 20 டிகிரி குளிரில் அமெரிக்கா கனடா…மக்கள் அவதி…

மைனஸ் 20 டிகிரி குளிரில் அமெரிக்கா கனடா…மக்கள் அவதி…

மைனஸ் 20 டிகிரி குளிரில் அமெரிக்கா கனடா…மக்கள் அவதி… post thumbnail image
வாஷிங்டன்:-வடதுருவத்தில் உள்ள ஆர்டிக் பிரதேசத்திலிருந்து மிகக்கடும் குளிர்காற்றுடன் புயல் தெற்கு நோக்கி வீசுகிறது. இதையடுத்து கனடா மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலன பகுதிகளில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் உறைநிலை -20 டிகிரி செண்டிகிரேடுக்கும் கீழே சென்றுவிட்டது.

துருவப்புயல் வீசுவதால், அங்கு கடந்த 20 வருடங்களில் காணாத அளவிற்கு மைனஸ் 51 டிகிரி செண்டிகிரேடுக்கும் குறைவான குளிர் உணரப்படக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பல மாநிலங்களில் பள்ளிகள் இயங்கவில்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளனர்.குளிர்ந்த காற்றால் 2 அடி உயரத்திற்கு அங்கு பனி கொட்டிக்கிடக்கிறது. இதனால், பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. சுமார் 4 ஆயிரம் விமானங்கள் நேற்று இயங்கவில்லை. மின்சாரமின்றி மக்கள் அவதியுறுகின்றனர்.

வீசும் கடும் புயல் மற்றும் குளிருக்கு சமீபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒரு உயிருக்கு ஊறு விளைவிக்கூடிய குளிர் காற்று என்று அமெரிக்க தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி