செய்திகள்,முதன்மை செய்திகள் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ பயன்படுத்த கர்நாடக அரசு தடை…

‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ பயன்படுத்த கர்நாடக அரசு தடை…

‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ பயன்படுத்த கர்நாடக அரசு தடை… post thumbnail image
பெங்களூர்:-கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கம்ப்யூட்டர் மூலம் ஆபாச வலைத்தளங்களுக்கு சென்று சிற்றின்ப காட்சிகளை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய போலீசாருக்கு தெரிய வந்தது.

கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியது.இதனையடுத்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும், தங்களது பணி நேரத்தில் அலுவலக கம்ப்யூட்டர்களின் வழியாக ‘பேஸ்புக்’, ’டுவிட்டர்’ போன்ற சமூக வலைத்தளங்களில் அரசு ஊழியர்கள் அரட்டை அடித்து பொழுதை கழிக்க தொடங்கினார்கள்.

இதுவும் தலைமை செயலாளரின் கவனத்துக்கு சென்றதால் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ மற்றும் ‘ஆன் லைன் ஷாப்பிங்’ இணைய தளங்களுக்குள்ளும் நுழைய முடியாதபடி ‘ஃபயர் வால்’ மென்பொருளை கர்நாடக அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர்களில் பொருத்த அரசு உத்தரவிட்டது.முதல் கட்டமாக தலைமை செயலகமான ‘விதான் சவுதா’, விகாச சவுதா போன்ற ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில் இந்த தடுப்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி