செய்திகள்,விளையாட்டு டெஸ்ட் தரவரிசையில் புஜாரா முன்னேற்றம்…

டெஸ்ட் தரவரிசையில் புஜாரா முன்னேற்றம்…

டெஸ்ட் தரவரிசையில் புஜாரா முன்னேற்றம்… post thumbnail image
துபாய்:-டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார்.

இந்திய வீரர் புஜாரா 2 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். விராட்கோலி ஒரு இடம் பின்தங்கி 11-வது இடம் பெற்றுள்ளார்.
பந்து வீச்சாளர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்களில் அஸ்வின் 7-வது இடத்திலும், ஓஜா 9-வது இடத்திலும் இருக்கின்றனர். ஆல்-ரவுண்டர் வரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி