நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்…

விளம்பரங்கள்

சித்தூர்:-ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த அம்சாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடம்மாள் மகள் பத்மா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

பிரசவ வலியால் அவதிப்பட்ட அவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் காலை குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்ற போது அங்கு பணியில் இருந்த பெண் நர்சு எந்தவித பதிலும் கூறாமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.அந்த நர்சு, பத்மாவின் உடல்நலம் கலைக்கிடமாக இருப்பதால் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என கூறி பத்மாவை வெளியில் அழைத்து வந்து விட்டு விட்டு வார்டு கதவை இழுத்து மூடி விட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் பத்மாவிற்கு பிரசவ வலி அதிகமாகியது. அவர் நடுரோட்டிலேயே குழந்தை பெற்றார். ஆத்திரம் அடைந்த குடும்பத்தாரும், உறவினர்களும் நர்சிடம் சென்று தகராறு செய்தனர்.அதன்பிறகு அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் பத்மாவும் குழந்தையும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: