செய்திகள்,தொழில்நுட்பம் விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட்

விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.- டி5 ராக்கெட் post thumbnail image
ஸ்ரீஹரிகோட்டோ:-தகவல் தொடர்பு சேவைக்கு பயன்படும் 1,982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கை கோளை ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது.

160 அடி உயரமும் 414 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி டி-5, முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு இருந்தது.இதற்கான 29 மணி நேர கவுண்டவுன் நேற்று ஆரம்பித்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிருந்து இன்று மாலை சரியாக 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. வெண்ணிற புகையை கக்கிக்கொண்டு வானத்தை நோக்கி ஜி.எஸ்.எல்.வி டி-5 வெற்றிகரமாக பாய்ந்து சென்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி