செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் பிப்ரவரி 15ல் கோச்சடையான் பாடல்கள்…

பிப்ரவரி 15ல் கோச்சடையான் பாடல்கள்…

பிப்ரவரி 15ல்  கோச்சடையான்  பாடல்கள்… post thumbnail image
சென்னை:-ரஜினிகாந்த் நடிக்க அவரது மகள் சவுந்தர்யா டைரக்டு செய்யும் படம் கோச்சடையான். இது முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோச்சடையான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.நடிகைகள் தீபிகா படுகோனே, ஷோபனா, நடிகர்கள் நாசர், ஜாக்கிஷெராப், சரத்குமார் ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 12–ந்தேதி ரஜினி பிறந்தநாள் அன்று கோச்சடையான் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில் நுட்ப பணிகள் முடிவடையாததால் அது தள்ளிப்போனது.

தற்போது ஆடியோ வெளியீடு தேதியை பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற பிப்ரவரி மாதம் 15ந் தேதி ஆடியோ வெளியிடப்படுகிறது.ஆடியோ ரிலீஸ் விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் படத்தில் நடித்த பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.ஆடியோ ரிலீசை தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதம் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.கோச்சடையான் படத்தின் டிரெய்லர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடும் ‘‘எங்கே போகுது வானம்’’ என்ற பாடல் மட்டும் இடம் பெற்று இருந்தது. இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி