செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் “பாத்து பேசுங்க” , “நெட்ரா” உஷார்!!!..

“பாத்து பேசுங்க” , “நெட்ரா” உஷார்!!!..

“பாத்து பேசுங்க” , “நெட்ரா” உஷார்!!!.. post thumbnail image
இணையத்தில் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகளை உளவுத்துறையினர் கண்காணிப்பதற்காக “நெட்ரா” (Netra) என்ற மென்பொருளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. டிஆர்டிஓ-வின் ஓர் அங்கமான செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோவியல் ஆய்வகம் (சிஏஐஆர்) இந்த மென்பொருளை உருவாக்கி இருக்கிறது.

இதன் மூலம் சமூக வலை தளங்கள், மின்னஞ்சல்கள், வலைப்பூக்கள், இணைய உரையாடல்கள் போன்றவற்றில் “தாக்குதல்” (attack))’, “குண்டு வெடிப்பு” (bomb blast) “கொலை செய்தல்” (kill) போன்ற சந்தேகத்துக்கு உரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், அவை உடனடியாக இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இதில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து சமீபத்தில் மத்திய அமைச்சரவை செயலகம், உள்துறை அமைச்சகம், டிஆர்டிஓ, சிஏஐஆர், ஐ.பி. உளவு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினர் விவாதித்து பரிந்துரை வழங்கியுள்ளனர்.நெட்ரா செயல்படத் தொடங்கும்போது, இணையத்தை பயன்படுத்துபவர்களைக் கண்காணிப்பது மிகவும் சுலபமாகிவிடும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி