செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் “சிம்புவுக்கு” வெளிநாட்டில் தடை!!!

“சிம்புவுக்கு” வெளிநாட்டில் தடை!!!

“சிம்புவுக்கு” வெளிநாட்டில் தடை!!! post thumbnail image

“சிம்புவும் ஹன்சிகாவும்” காதலித்து வருகின்றன. திருமணத்துக்கு சிம்பு அவசரப்படுத்தினார். ஆனால் ஹன்சிகா ஏற்கவில்லை. சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருப்பினும் சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஹன்சிகா, தமிழ், தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். இதன் மூலம் “கோடி கோடியாய்” சம்பாதிக்கிறார். இதைவிட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதை ஹன்சிகா குடும்பத்தினர் விரும்பவில்லை. இந்த நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா தேர்வாகியுள்ளார். இது ஹன்சிகாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிம்புவால் ஹன்சிகாவை மறக்க முடியவில்லை. காதலை புதுப்பிக்க ஹன்சிகாவை தேடி சென்று வருகிறார். அவர் படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது என்று விசாரித்து அங்கெல்லாம் சென்றுவிடுவர். ஆனால் சிம்புவை சந்திக்க ஹன்சிகா மறுத்துவிடுகிறார்.

மேலும், வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பில் “ஹன்சிகாவை” சந்திக்க சென்றதாகவும் அங்கேயும் சிம்புவை பார்க்க அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி