செய்திகள் இசை கச்சேரி நடத்தும் ஜெயில் கைதிகள்…

இசை கச்சேரி நடத்தும் ஜெயில் கைதிகள்…

இசை கச்சேரி நடத்தும் ஜெயில் கைதிகள்… post thumbnail image
வேலூர்:-வேலூர் ஜெயிலில் பிரத்யேக பயிற்சி பெற்ற இசைக்குழு ஒன்று உள்ளது. இதில் 15 கைதிகள் உள்ளனர். ஜெயிலில் சுதந்திரதின, குடியரசு தின விழாக்கள், உயர் அதிகாரிகள் வருகையின் போது கைதிகள் இசை வாத்தியங்கள் முழங்க பாட்டுப் பாடுவார்கள்.

இசை நிகழ்ச்சியின் போது கைதிகள் ஆட்டம், பாட்டம் என ஜெயில் வளாகம் களைகட்டும், சிறைக் குயில்களாக இருந்த இந்த இசைக்குழுவினருக்கு பொதுமக்கள் முன்பு பாடும் வாய்ப்பு கிடைத்தது.ஜெயில் அருகே கைதிகள் தயாரித்த ஷூ, பெல்ட், பர்ஸ், காய்கறிகள், டீபன் சாப்பாடு விற்பனை அங்காடி திறப்பு விழா நேற்று நடந்தது.

தொடக்க விழாவில் கைதிகள் இன்னிசை கச்சேரி அரங்கேற்றம் நடந்தது. சிறை காவலர் ஒருவர் டிரம்ஸ் வாசிக்க, கைதிகள் சிலர் இசைக்கருவிகளை இசைத்து பாட்டுபாடி அசத்தினர். பக்தி பாடல்களோடு தொடங்கிய கச்சேரி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.”கடவுள் ஏன் கல் ஆனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே” என்ற பாடலை கைதி ஒருவர் பாடிய போது அந்த பகுதியே அமைதியானது. சதிசெயல் செய்தவன் புத்திசாலி அதை சகித்து கொண்டிருந்தவன் குற்றவாளி என்ற வரிகளை உருக்கமாக பாடினார்.
வருது வருது விலகு விலகு வேங்கை வெளியே வருது என கானா, தத்துவ பாடல்களால் கச்கேரி பிரமாதமாக இருந்தது என அதனை ரசித்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி