ஆன்லைனில் விபச்சாரம்…புரோக்கர்கள் கைது …

விளம்பரங்கள்

சென்னை:-சென்னையில் விபசாரத்தை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனிப்பிரிவு , மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே சொகுசு காரில் வெளி மாநில அழகிகள் 2 பேர் இருப்பதாகவும், அவர்களுக்காக 4 புரோக்கர்கள் வாடிக்கையாளர்களை தேடுவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த காரை சுற்றி வளைத்தனர். அதில் ஆந்திரா மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த 2 பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் மீட்டனர்.

அங்கு நின்று கொண்டிருந்த 4 புரோக்கர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சம்சுதீன், இளையான்குடியை சேர்ந்த சுந்தரபாண்டியன், திண்டுக்கல்லை சேர்ந்த விஜயராகவன், சிவகங்கையை சேர்ந்த கணேசன் என்று தெரியவந்தது.இவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களை தேடிப்பிடிப்பார்கள். பின்னர் வாடிக்கையாளர்கள் கேட்கும் இடங்களுக்கு அழகிகளை கொண்டு ஒப்படைக்கிறார்கள்.அதுபோல தற்போது வாடிக்கையாளர்களுக்கு காத்திருந்தபோதுதான் போலீசில் சிக்கிக் கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: