செய்திகள்,முதன்மை செய்திகள் நியூயார்க்கில் சாலையில் ஓடிய குட்டி விமானம் …

நியூயார்க்கில் சாலையில் ஓடிய குட்டி விமானம் …

நியூயார்க்கில் சாலையில் ஓடிய குட்டி விமானம் … post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்க நியூயார்க் நகரின் முக்கியமான தீகான் அதிவிரைவு சாலையில் நேற்று மாலை ஒரு குட்டிவிமானம் அவசரமாக தரையிறங்கியது. இந்த அதிவிரைவு சாலையில் சென்ற எந்த வாகனத்திலும் மோதாமல் பத்திரமாக இறங்கியது .

பின்னர் அந்த விமானத்தில் இருந்து 50 வயதில் ஒரு ஆணும் 43 மற்றும் 20 வயதில் இருபெண்களும் வெளியே வந்தனர். சிங்கிள் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த குட்டிவிமானத்தில் பயணித்த மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில் ஒருவருக்கு மட்டுமே லேசான காயம் ஏற்பட்டிருந்தது.

இவர்கள் அனைவரும் கனக்டிகட் டேன்பர்ரி விமானநிலையத்திலிருந்து சுதந்திர தேவி சிலையை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். வரும் வழியில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த குட்டிவிமானம் அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி