பிரதம வேட்பாளர் ராகுல்…சோனியாவின் திடீர் முடிவு…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அடுதத மாத இறுதியில் 7 கட்ட தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கூட்டணி உடன்பாடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார வியூகம் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தும் எந்த கட்சியும் தேர்தலை எதிர் கொண்டதில்லை. முதல் முறையாக பாரதீய ஜனதா கட்சி, குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தி தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி விட்டது. குஜராத்தை மிகப்பெரும் வளர்ச்சிப் பணிக்கு கொண்டு சென்றுள்ளதால், மோடி மீதான எதிர்பார்ப்பும், அலையும் நாடெங்கும் ஏற்பட்டுள்ளது.இது காங்கிரஸ் கட்சிக்கு பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிரதமர் வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது பற்றி காங்கிரஸ் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவது 100 சதவீதம் பலமாதங்களுக்கு முன்பே உறுதியாகி விட்டது. பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பேட்டியளித்த போது ‘‘அடுத்த பிரதமராக ராகுல் பொறுப்பேற்க அனைத்து தகுதிகளும் உள்ளன’’ என்று கூறியதன் மூலம், வரும் பாராளுமன்றத் தேர்தலை ராகுலை முன்நிறுத்தியே காங்கிரஸ் எதிர்கொள்ள இருப்பது மீண்டும் ஒரு தடவை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.ஆனால் ராகுல்காந்தி பெயரை எப்போது அறிவிப்பது என்பதில்தான் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரசில் ஒரு சாரார் ராகுல் பெயரை உடனே அறிவிக்க வலியுறுத்தி வருகிறார்கள்.

மற்றொரு பிரிவினர், ‘‘ராகுல் பெயரை அறிவிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்’’ என்று கூறியுள்ளனர். இதனால் சோனியா, ராகுல் பெயரை அறிவிப்பதற்கான சூழலை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறப்படுகிறது.காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் வருகிற 17–ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக ராகுலை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக அடுத்த வாரமே அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.து தொடர்பாக டெல்லி வட்டார காங்கிரஸ் வட்டாரங்களில், ‘‘பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். அது காங்கிரசுக்கு வலிமை சேர்க்கும். 16–ந் தேதிக்கு முன்பு ராகுல் பெயர் அறிவிக்கப்பட்டு விடும்’’ என்றனர்.

இதற்கிடையே ராகுல் பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால் அது காங்கிரசுக்கு எதிர் விளைவை ஏற்படுத்தி விடக்கூடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் அச்சம் தெரிவித்துள்ளனர். ராகுல்காந்திக்கு பிரதமர் பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பக்குவம் உள்ளதா என்று நாட்டு மக்கள் சிந்தித்தால், அது காங்கிரசின் வெற்றியை பாதிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ராகுல்காந்திக்கு நேரு பரம்பரையில் வந்தவர் என்ற அந்தஸ்து தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் இல்லை என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுக்களை எப்படி எதிர் கொள்வது என்ற தர்மசங்கடமும் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும் ஏற்பட்டுள்ளது.ராகுல்காந்தி இதுவரை மத்திய மந்திரியாக இருந்து, இலாகாகளை கவனித்து ஆட்சி, நிர்வாகம் தொடர்பான எந்த அனுபவத்தையும் பெற்றதில்லை. அது போல பாராளுமன்ற விவாதங்களில் பங்கேற்று ஆக்கப்பூர்வமான பேச்சை திறம்பட வெளிப்படுத்தியதும் இல்லை. இவையெல்லாம் ராகுலுக்கு உள்ள பலவீனமாகக் கருதப்படுகிறது.

இவை அனைத்துக்கும் மேலாக, நாடெங்கும் மோடி அலை வீசுகிறது. அந்த அலைக்கு எதிர் அலை ஏற்படுத்தும் சக்தியை ராகுலால் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்குறி காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது.என்றாலும் ராகுல் பெயரை அறிவிப்பதைத் தவிர சோனியாவுக்கு வேறு வழி இல்லை. அதற்கான சூழ்நிலைகளும் உருவாக் கப்பட்டு விட்டது. எனவே காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக ராகுல் அறிவிக்கப் படுவதை விரைவில் எதிர்பார்க்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: