நட்பை முறித்ததால் மாணவி மீது வெந்நீர் ஊற்றிய வாலிபர்…

விளம்பரங்கள்

முசாபர்பூர்:-8-ம் வகுப்பு படிக்கும் மாணவியின் தந்தையிடம் முசாபர் நகர் அரசு கல்லூரி மாணவர் ஒருவர் டியூசன் படித்து வந்தார். அப்போது மாணவிக்கும், கல்லூரி மாணவனுக்குமிடையே அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் பேஸ்புக் தளத்தில் நண்பர்களாக இணைந்தனர்.

சமீபகாலமாக அந்த மாணவர் தவறான செய்திகளை பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி, பேஸ்புக்கில் உள்ள தனது நண்பர்கள் பட்டியலில் இருந்து சமீபத்தில் அந்த மாணவனை நீக்கியுள்ளார். இதனால் அவன் மாணவியின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளான்.இந்நிலையில், தனது அடையாள அட்டையை தேடும் சாக்கில், மாணவியின் வீட்டுக்கு வந்த மாணவன், திடீரென மாணவியின் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

வெந்நீர் பட்டதால் மாணவியின் முகம் வெந்தது. 20 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாணவனைத் தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி