அமெரிக்காவில் பனி புயலில் சிக்கி 15 பேர் பலி …

விளம்பரங்கள்

நியூயார்க்:-அமெரிக்காவில் கிழக்கு, மத்திய மேற்கு பகுதிகளில் சில நாட்களாக கடும் பனிப்புயல் வீசியது. அதில் நியூயார்க், பாஸ்டன், நியூஜெர்சி நகரங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

இங்கு 1 அடி முதல் 2 அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் விழுந்து கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பகல் நேரத்திலும் பல இடங்களில் போக்குவரத்து முடங்கியது.
இதன் விளைவாக பாஸ்டன் நகரில் நேற்று முன்தினம் குளிர் தாங்காமல் 9 பேர் இறந்தனர். நியூயார்க் நகரில் ஒரு பெண் உயிர் இழந்தார். இந்த பலி எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்தது. இவர்களில் பெரும்பாலானோர் வீடு இன்றி தவித்த மக்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: