ரீ- என்ட்ரி “மம்தா”!!!

ரீ- என்ட்ரி “மம்தா”!!! post thumbnail image
“சிவப்பதிகாரம்” படத்தில் அறிமுகமானவர் நடிகை மம்தா. அதன்பிறகு “குரு நம்ம ஆளு” என சில படங்களில் நடித்தார் தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் மலையாளத்துக்குச் சென்றார்.

மலையாளத்தில் அதிக படங்களை கைப்பற்றி வேகமாக வளர்ந்துக்கொண்டிருந்தார். “அன்வர்” என்ற மலையாள படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது தான் புற்று நோய் தன்னை தாக்கியிருப்பதை உணர்ந்தார் “மம்தா”. அப்படத்தை முடித்துக்கொடுத்து விட்டு சிகிச்சைக்கு சென்றார்.

சிகிச்சைக்கு பின் மேலும், சில படங்களில் நடித்தார். ஆனால், மீண்டும் தனது உடம்பில் நோயின் தாக்கம் இருப்பதற்கான அறிகுறி தெரிந்தது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறுபடியும் புற்று நோய்க்கான சிகிச்சை எடுக்க சென்ற மம்தா இப்போது பூரணமாக குணமாகி விட்டார்.

அதனால், மீண்டும் மலையாள படங்களில நடிக்கத் தொடங்கியிருக்கிறார். கிருஷ் சத்தார் என்ற நடிகருக்கு ஜோடியாக “டு நோரா வித் லவ்” என்ற படத்தில் புதிதாக கமிட்டாகியிருக்கிறார். அதிரடியான வேடங்களிலும் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் சில மலையாள டைரக்டர்களிடம் கூறுகிறார். மேலும் தனக்கு பாடுவதற்கும் சான்ஸ் தருமாறும் சில இசையமைப்பாளர்களிடம் ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்.

.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி