ஹைதராபாத் – மும்பையிலும் வருமா? “அம்மா உணவு” !!!

விளம்பரங்கள்

தமிழகத்தில் பல மாநகரங்களில் அதிமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் அம்மா உணவகம் இப்போது பல்வேறு மாநிலங்களுக்கும் பயன்பட போகிறது . ராஜஸ்தான் மாநிலத்திலும் அதே போன்ற மலிவு விலை உணவகங்களைத் தொடங்க அந்த மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா திட்டமிட்டு உள்ளார்.

தமிழகத்தில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்படுவது எ்ப்படி, அதை ராஜஸ்தானில் எப்படி நிறுவலாம், என்னென்ன உணவு வகைகளைத் தரலாம் இது குறித்து தற்போது ராஜஸ்தான் மாநில அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அம்மா உணவகங்களை நேரில் பார்த்த குழுவின் தலைவரான ராஜஸ்தான் உள்ளாட்சிகளுக்கான இயக்குநர் கே.கே.சர்மா கூறுகையில், இந்த கேன்டீன்கள் எப்படி செயல்படுகின்றது என்பதை நேரில் பார்த்துள்ளோம். எங்களுக்கு உதவ ஜெய்ப்பூருக்கு வருமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் தவிர ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் இதேபோன்ற உணவகங்களை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட நகரங்களின் நிர்வாகங்கள் ஆர்வமாக இருக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: