“மன்னார்”(ரு) சூர்யா!!!

விளம்பரங்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ற பெயரில் பல்வேறு யூகங்கள் வெளியாகி பரபரப்பு கிளப்பி வருகின்றன. சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி தயாரித்து இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக “சமந்தா” முதன்முறையாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் அங்கு பிரமாண்ட செட் ஒன்று அமைத்து பாடல் காட்சியை படமாக்கப்பட்டன.

இப்படத்திற்கு “ராஜூ பாய்” அல்லது “மன்னார்” என்று பெயரிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் மற்றும் முன்னொட்டம் வருகிற பொங்கல் தினத்தன்று வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை வேகமாக முடித்துக் கொடுக்கும் சூர்யா, அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி