செய்திகள்,முதன்மை செய்திகள் 2013ம் ஆண்டில் 70 பத்திரிகையாளர்கள் கொலை…

2013ம் ஆண்டில் 70 பத்திரிகையாளர்கள் கொலை…

2013ம் ஆண்டில்  70 பத்திரிகையாளர்கள் கொலை… post thumbnail image
உலக நடப்புகளை சேகரித்து பத்திரிகை, ஊடகம் உள்ளிட்ட நிருபர்கள் செய்திகளை அளித்து வருகின்றனர். போர்முனை, உள்நாட்டு கலவரம் நடைபெறும் பகுதிகளில் பணியில் ஈடுபடும் அவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.எனவே, அவர்களை பாதுகாக்க நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு ‘பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு கமிட்டி’ என்ற அமைப்பு நடத்த 1981–ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டில் பணியின் போது கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குறித்து இச்சங்கம் ஆய்வு நடத்தியது. அதில், சர்வதேச அளவில் இதுவரை 70 பேர் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.இவர்களில் மூன்றில் இரண்டு மடங்கு பேர் மத்திய கிழக்கு நாடுகளான பாகிஸ்தான், சோமாலியா, இந்தியா, பிரேசில், பிலிப்பைன்ஸ், நாடுகளில் கொலை செய்யப்பட்டுள்னர்.

பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவில் தான் அதிகம் பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மட்டும் 5 பேர் கொலையுண்டு இருக்கின்றனர்.தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சிரியாவில் 29 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் லெபனான் மற்றும் துருக்கு எல்லையில் உயிரிழந்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி