14 வயது சிறுவர்களின் “லீலை”யால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி…

விளம்பரங்கள்

திருப்பூர் கே.வி.ஆர். நகரைச் சேர்ந்த தம்பதியின் 7 வயது மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2–ம் படித்து வருகிறாள். சிறுமி தனது பாட்டி வீட்டின் முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 10–ம் வகுப்பு மாணவர்கள் ஹரிகிருஷ்ணன்(14), சூர்யா(14) ஆகியோர் அங்கு வந்தனர்.

மாணவியிடம் நைசாக பேசி அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். வீடு திரும்பிய சிறுமி சிறுநீர் கழிக்க சென்ற போது வலியால் துடித்தாள்.

என்ன ஏது என்று பெற்றோர் விசாரித்த போதுதான் மாணவர்கள் இருவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதிர்ந்து போன பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து மாணவர்கள் இருவரையும் கைது செய்து மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டார். அதன்படி இருவரும் அங்கு சேர்க்கப்பட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: