செய்திகள்,முதன்மை செய்திகள் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி…

சுவையான சிக்கன் கட்லெட் ரெடி…

சுவையான சிக்கன் கட்லெட் ரெடி… post thumbnail image
முதலில் 1/2, சிக்கனுடன் 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வேக வைக்கவும்.வேகவைத்த சிக்கன் ஆறிய பின்பு அதை மிக்ஸ்யில் அல்லது பூட் பிராசசர் மூலம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில்1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி நன்கு வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பிறகு அதில்1 டீஸ்பூன் பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் இஞ்சிபேஸ்ட் ,1 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் மற்றும் புதினா தழை போட்டு வதக்கவும்.வதக்கிய பிறகு அதில் அரைத்து வைத்த சிக்கன்,கரம் மசாலா தூள், 1 உருளைக் கிழங்கு (வேகவைத்து தோல் நீக்கி மசித்து வைக்கவும் ) மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

சிறது நேரம் சூடு தணிந்த பின்பு, அவற்றை சிறு உருண்டை அல்லது விருப்பமான வடிவில் செய்து, அடித்து வைத்துள்ள 1 முட்டையில் நனைத்த பின்னர் பிரட் தூள்களில் புரட்டி எடுக்கவும். புரட்டி எடுத்த கட்லெட்ஐ வானலியில் எண்ணையை விட்டு வறுத்து எடுத்தால் சுவையான சிக்கன் கட்லெட் ரெடி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி