செய்திகள்,முதன்மை செய்திகள் பிரானாவின் தாக்குதல் …

பிரானாவின் தாக்குதல் …

பிரானாவின் தாக்குதல் … post thumbnail image
அர்ஜெண்டினா நாட்டில் உள்ள ரோசாரியோ நகரைச் சேர்ந்தவர்கள் அருகிலிருந்த கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அங்கிருந்த கடலில் இறங்கி ஆனந்தக் குளியலிட்டுள்ளனர்.

அப்போது, அங்குக் குளித்துக் கொண்டிருந்தவர்களை எதிர்பார்க்காத தருணத்தில் கடலுக்கு இருந்து பிரானா எனப்படும் மீன்கள் தாக்கியுள்ளன.என்ன நடக்கிறது என அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள், குழந்தைகள் உட்பட அப்பகுதியில் குளித்தவர்களின் உடலைக் கடிக்கத் துவங்கியுள்ளன பிரானாக்கள். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அம்மக்கள் அலறித்துடித்து கடலிலிருந்து வெளியே ஓடி வந்துள்ளனர்.

இந்தக் கொடூர தாக்குதலில் சிக்கி சுமார் 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களின் பல குழந்தைகள் தங்கள் விரல்களை முழுவதுமாக பறி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட பிரானாக்களின் தாக்குதலால் அப்பகுதி கடல் நீர் சிவப்பு நிறமாகக் காட்சியளித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி