துபாய் மாப்பிள்ளையை மணக்கும் மீரா ஜாஸ்மின் …

விளம்பரங்கள்

தமிழ், மலையாள சினிமாவின் முன்னணி நடிகை மீரா ஜாஸ்மின். தமிழக்கு ரன் படத்தின் மூலம் அறிமுகமானார். பாடம் ஒன்னு ஒரு விலாபம் என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது இங்க என்ன சொல்லுது, விஞ்ஞானி படங்களில் நடித்து வருகிறார்.

மீரா ஜாஸ்மின் பிரபல மாண்டலின் இசை கலைஞர் ராஜேசை காதலித்து வந்தார். இருவரும் பல பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர். காதலை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் மீரா ஜாஸ்மின், துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றும் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

ஜான் டைட்டஸ் சென்னை ஐ.ஐ.டியில் படித்து விட்டு துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். இவர்கள் திருமணம் வருகிற பிப்ரவரி 12ந் தேதி திருவனந்தபுரம் எல்.எம்.எஸ் தேவாலயத்தில் நடக்கிறது. அதன் பின்னர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. தமிழ் மற்றும் மலையாள சினிமா உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: