செய்திகள்,முதன்மை செய்திகள் உலகின் காரமான மிளகாய் …

உலகின் காரமான மிளகாய் …

உலகின் காரமான மிளகாய் … post thumbnail image
அமெரிக்க நாட்டை சேர்ந்த எட்குரிய் என்ற விவசாயி வளர்த்த மிளகாய் தான் உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என அறிவியல் அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அது கின்னஸில் இடம் பிடித்து சாதனை படைத்தது.கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த மிளகாய் பற்றி வின்த்ரோப் பல்கலைக்கழகம் ஆய்வுக்கு எடுத்து கொண்டது. ஆய்வின் முடிவில் இது உலகிலேயே மிகக் காரமான மிளகாய் என சான்றிதழ் வழங்கி கின்னஸிலும் இடம் பிடித்தது.

நிலநடுக்கத்தை ரிக்டர் அளவு என குறிப்பது போல, காரத்தன்மையை ஸ்கோவிலி என அளவிடுகிறோம். அந்த வகையில் நாம் உணவிற்கு பயன்படுத்தும் மிளகாய் 5 ஆயிரம் ஸ்கோவிலி யூனிட் ஆகும். ஆனால் சாதனை படைத்த இந்த மிளகாயின் காரத்தின் அளவு 15 லட்சத்து 69 ஆயிரத்து 300 யூனிட்.நூறு ஆண்டு முன்பு காரத்தை அளவிடும் ஸ்கோவிலி யூனிட்டை ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதில் சர்க்கரை தண்ணீரை கலந்த கலவை யின் துணையுடன் சூட்டில் வைத்து காரத்தன்மையை கணக்கிடுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி