ரிலீஸ் ஆக காத்திருக்கும் லவ் ஆன் தம்…

விளம்பரங்கள்

சிம்புவின் லவ் ஆன் தம் வேர்ல்ட் பீஸ் 2015ல் ரிலீஸ் ஆக உள்ளது. சிம்புவும் மேற்கத்திய பாடகருமான ராக் ஸ்டாருமான ஏகானும் இணைந்து பாடி உள்ளனர். இதுகுறித்த சிம்பு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பொன்றில்,கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் அளித்தார். 2011ம் ஆண்டு ஏகானின் கால்ஷீட் வாங்கித் தருவதாக ஒரு நிறுவனம் ஒரு கோடி வரை வாங்கி ஏமாற்றி விட்டார் என்பதுவே.ஆனால் சில மீடியாக்களில் ஏகான் மீது புகார் செய்ததாக தவறாக வெளிவந்திருக்கிறது. அந்த நிறுவனம் ஏமாற்றிவிட்டதால் வமீதரன் என்பவரின் டிராக்ட்டிக்கல் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் ஏகான் கால்ஷீட் பெறப்பட்டது.

கடந்த மே 4,5,6 தேதிகளில் சென்னை வந்த ஏகான், சிம்புவுடன் பாடி லவ் ஆன் தம் ஆல்பத்தை சிறப்பாக செய்து கொடுத்தார். அவரது ஈடுபாடும், அர்ப்பணிப்பும் மறக்க முடியாததாக இருந்தது. இதற்கிடையில் ஒரு நிறுவனம் ஏமாற்றியதை அறிந்த ஏகான் மிகவும் வருந்தினார். அந்த ஏஜென்சியிடமிருந்து பணத்தை பெற்றுத்தர ஏகானும் முயற்சித்தார். அவராலும் முடியவில்லை. இந்த பிரச்னைகள் ஒருபக்கம இருந்தாலும் லவ் ஆன்தம் சிறப்பாக வந்திருப்பதில் சிம்புவும், ஏகானும் சந்தோஷமாக உள்ளனர். 2015ல் ஆல்பம் ரிலீசாகிறது. அப்போது ஏகானும் வர இருக்கிறார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: