செய்திகள்,முதன்மை செய்திகள் சேலையில் வந்த வெளிநாட்டினர்…

சேலையில் வந்த வெளிநாட்டினர்…

சேலையில் வந்த வெளிநாட்டினர்… post thumbnail image
பழனியில் தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டும், சபரிமலை சீசனை முன்னிட்டும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.மேலும் தைப்பூச திருவிழா கொடியேற்றம் தொடங்கும் முன்பே இப்போதே பாத யாத்திரை பக்தர்களும் வருகை தந்தபடி உள்ளனர்.

இது மட்டுமின்றி பழனி கோவிலில் எப்போதும் வெளிநாட்டு பக்தர்களின் வருகையும் அதிகளவில் இருக்கும். அதன்படி தற்போது விடுமுறை காலமாக இருப்பதால் அதிகளவில் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் கலிபோர்னியாவை சேர்ந்த 50 பேர் ஒரு குழுவாக பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இவர்கள் இந்துமத முறைப்படி ஆண் பக்தர்கள் வேட்டி மேல் துண்டு அணிந்தும், பெண்கள் சேலை அணிந்தும் வந்தனர்.மலைக்கோவிலுக்கு சென்று அர்ச்சனைகள் செய்து நெற்றியில் விபூதியை பக்தியுடன் பூசிக்கொண்டனர். பழனி கோவிலுக்கு வந்த பக்தர்கள் இந்த வெளிநாட்டு பக்தர்களின் பக்தியை வியப்புடன் பார்த்து சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி