சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு விருது…

விளம்பரங்கள்

கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு, ஆண்டு தோறும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.அந்த வகையில் நடப்பு ஆண்டின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் “பாலி உம்ரிகர்’ விருதுக்கு, இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பி.சி.சி.ஐ., நிர்ணயித்த காலகட்டத்தில் 8 டெஸ்டில் விளையாடிய அஷ்வின், 43 விக்கெட் மற்றும் 263 ரன்கள் (2 அரைசதம்) எடுத்தார். 18 ஒருநாள் போட்டியில் 24 விக்கெட் வீழ்த்திய இவர், 4 சர்வதேச “டுவென்டி-20′ போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு விருதுடன் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும். முன்னதாக இவ்விருதை “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் (2006-07), சேவக் (2007-08), காம்பிர் (2008-09), டிராவிட் (2010-11), கோஹ்லி (2011-12) ஆகியோர் வென்றனர்.

சிறந்த “ஆல்-ரவுண்டருக்கான’ “லால் அமர்நாத்’ விருதுக்கு, மும்பை வீரர் அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ரஞ்சி சீசனில் (2012-13), “ஆல்-ரவுண்டராக’ அசத்திய இவர், 966 ரன்கள் மற்றும் 19 விக்கெட் கைப்பற்றினார். இவருக்கு விருதுடன், ரூ. 2.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

2012-13ல் நடந்த உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை அணிக்கு, சிறந்த அணிக்கான விருது வழங்கப்படுகிறது.

சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்து அசத்திய இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு, சிறந்த சாதனையாளருக்கான “திலீப் சர்தேசாய்’ விருது வழங்கப்பட உள்ளது. இவருக்கு விருதுடன், ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

ரஞ்சி கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஜிவான்ஜோத் சிங் சவுகான் (995 ரன்கள்), ஈஷ்வர் பாண்டே (48 விக்கெட்) ஆகியோர் “மாதவ்ராவ் சிந்தியா’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விருதுடன், ரூ. 2.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: