இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் மிஞ்சிய பொங்கல் , சப்பாத்தி (பல) டிப்ஸ்(கள்) …

மிஞ்சிய பொங்கல் , சப்பாத்தி (பல) டிப்ஸ்(கள்) …

மிஞ்சிய பொங்கல் , சப்பாத்தி (பல) டிப்ஸ்(கள்) … post thumbnail image
வெங்காயம் நறுக்கிய பிறகும், பூண்டு உரித்த பிறகும் கைகளில் வாடை வருகிறதா stainless steel ஸ்பூன்களில் கைகளை தேயுங்கள் வாடை ஓடிவிடும்.

பிரியாணி போன்ற மசாலா கலந்த அரிசி உணவுகளை செய்யும்போது, உணவு அடிப்பிடித்து விட்டால் அதன்மீது ஒரு பிரெட் துண்டினை வையுங்கள், தீய்ந்த வாசனை காணாமல் போய்விடும்.

பிஸ்கட்டுகளை டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது, டப்பாவிற்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துவிட்டால், பிஸ்கட்டுகள் நீண்ட நாட்களுக்கு ஃபிரஷ்ஷாக இருக்கும்.

சமைத்த பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக சுத்தம் செய்ய அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போடுங்கள்.

பூரி இடும்போது மெல்லிசாய் இடாதீர்கள். அப்படிச் செய்தால் பூரி உப்பிக் கொண்டு வர வாய்ப்பே இல்லை. தடிமனான பூரிகள் மட்டுமே நன்கு உப்பும்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வெந்நீரில் பிசையவும்.சிறிது பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல் இரவு உணவுக்காக சமைத்த சாம்பார் அல்லது ரசம் மீந்துவிட்டால், அதனை வடிகட்டி, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்தால் சுவையான, ருசியான மசாலா சப்பாத்தி ரெடி.

சப்பாத்தி மீந்துவிட்டால், பிரிட்ஜில் வைப்பதால் அடுத்தநாள் மிகவும் கடினமாக ஆகிவிடும். இந்த சப்பாத்திகளை நீளவாக்கில் மெலிசாக வெட்டி, துருவிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, தேவையான மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் நொடியில் ரெடி

இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.

பழைய பால்குக்கரில் பக்கவாட்டில் தண்ணீர் ஊற்றி அதில் பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வைத்தால் இரண்டு மூன்று நாட்களுக்குப் பசுமையாக இருக்கும்.

மிக்ஸர், ஸ்வீட்டுகள், சர்க்கரை இவற்றில் எறும்பு வராதிருக்க, பில்லைக் கற்பூரம் (10 அடங்கிய) பாக்கெட் ஒன்றைப் போடுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

மீதமுள்ள பொங்கலை சிறிதளவு அரிசி மாவுடன் பிசைந்து அந்த கலவையில் துருவிய கேரட், நறுக்கிய புதினா போன்றவற்றை சேர்த்து அடையாகவோ அல்லது சிறு வடைகளாகவோ சுட்டால் ருசியாக இருக்கும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி