செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் மத்திய அரசு புதிய முடிவு …

மத்திய அரசு புதிய முடிவு …

மத்திய அரசு புதிய முடிவு … post thumbnail image
5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் புதிய திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.அதனை அடுத்து இனி ஷாப்பிங் மால்கள், குடிசைப் பகுதிகளிலும் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய எண்ணை நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பெட்ரோல் பங்குகளில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது நாடெங்கும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது, குறிப்பாக மாணவர்கள், ஐ.டி. மற்றும் பி.பி.ஓ.க்களில் பணி புரிபவர்களுக்கு 5 கிலோ கியாஸ் திட்டம் மிகவும் உதவியாக உள்ளது. அதோடு சமீப காலமாக 5 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கான தேவை அதிகரித்து வருவதால் டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் காரணமாக தற்போதுதான் 5 கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனை தொடங்கி உள்ளது. இதற்கிடையே இதன் விற்பனை எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக பெட்ரோலியம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த திட்டத்தின்படி ஷாப்பிங் மால்களிலும்,மேலும் குடிசைப் பகுதிகளிலும் 5 கிலோ சமையல் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன்மூலம் குடிசைப்பகுதி மக்கள் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வாங்குவதை கட்டுப்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி