திரையுலகம்,முதன்மை செய்திகள் தூம்-3 யின் சாதனைகள் …

தூம்-3 யின் சாதனைகள் …

தூம்-3 யின் சாதனைகள் … post thumbnail image
இதுவரை காணாத அளவிற்கு இந்திய சினிமா சாதனைகளையும் அடித்து நொறுக்கிவிட்ட படம் தான் தூம் 3. 250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் கடந்து 20ந் தேதி வெளியாகியிருக்கிறது.

நான்கு ஆயிரம் தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீசானது. முதல் நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 36 கோடி வசூலித்துயிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 33.42 கோடி வசூல். தூம் 3 இந்திய சினிமாவில் சாதனை வெற்றியாகும்.

மறுநாள் சனிக்கிழமை 38 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 42 கோடியும் வசூலித்து மூன்று நாட்களிலேயே 100 கோடியை தாண்டியது. ஆங்கிலத்தில் வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூல் .

நான்கு ஆயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டிருப்பதால் படம் மூன்று வாரங்கள் மட்டுமே அந்த தியேட்டர்களில் இருக்கும் என்றும் அதன் பிறகு மூன்றில் ஒரு பகுதியாக குறைந்து விடும் என்றும் அதற்குள் 300 கோடிக்குமேல் வசூலித்து விடும் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி