செய்திகள்,முதன்மை செய்திகள் சுனாமி நினைவு தினம் …

சுனாமி நினைவு தினம் …

சுனாமி நினைவு தினம் … post thumbnail image
இன்று தமிழகத்தை சுனாமி தாக்கியதன் 9வது ஆண்டு நினைவு நாள்.அதனையொட்டி சுனாமியில் பலியானவர்களுக்கு கடற்கரைகளில் சிறப்பு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2004ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி சுமத்திரா தீவில் கடலுக்கடியில் ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலை எனப்படும் சுனாமி, இந்தோனேஷியா, சிங்கப்பூர், இந்தியா,தாய்லாந்து,மாலத்தீவுகள் உள்ளிட்ட பல நாடுகளை கடுமையாக தாக்கியதில் 14 நாடுகளைச் சேர்ந்த 2,30,000 பேறுக்கு மேல் உயிரிழந்தனர்.

இதில் தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டனம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.சுனாமியில் உறவுகளை, உடைமைகளை இழந்த பாதிக்கப் பட்ட மக்கள், சுனாமி அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீண்டு வரவில்லை. சுனாமியில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடற்கரைகளில் சிறப்பு பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி