செய்திகள்,முதன்மை செய்திகள் போலீஸ் நிலையத்தில் காரை நிறுத்தி காரை காணவில்லை என கூறிய குடிமகன்கள்…

போலீஸ் நிலையத்தில் காரை நிறுத்தி காரை காணவில்லை என கூறிய குடிமகன்கள்…

போலீஸ் நிலையத்தில் காரை நிறுத்தி காரை காணவில்லை என கூறிய குடிமகன்கள்… post thumbnail image
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மேம்பாலத்துக்கு கீழ் பகுதியில் நகர போக்குவரத்து காவல் நிலையம் செயல்படுகிறது. சென்னை மற்றும் தென்மாவட்ட வாகனங்கள் அனைத்தும் இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் காவல்நிலைய வளாகத்துக்குள் ஒரு கார் திடீரென வந்து நின்றது.

அதற்குள், 4 பேர் குடி போதையில் இருந்தனர். காரை பூட்டிவிட்டு இறங்கிய அவர்கள் 4 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.இதற்கிடையே, அந்த காரின் உரிமையாளர் ஆனந்தகுமார் என்பவர், தனது காரை காணவில்லை என போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் தீவிரமாக காரை தேடியபோது, திண்டிவனம் போக்குவரத்து காவல் நிலையத்தில் நிற்பது தெரிய வந்தது.

போதையில் இருந்த கார் டிரைவர் மற்றும் அவருடன் வந்த 3 பேரும் காரை எங்கு நிறுத்தினோம் என்பது தெரியாமல் சாவியை மட்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்துச் சென்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. காரை சோதனை போட்டபோது அதில் மதுபாட்டில்கள் கிடந்தன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை பறிமுதல் செய்தனர். மேலும், போதையில் வந்த 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் போலீஸ் நிலையத்திலேயே குடிமகன்கள் காரை நிறுத்திவிட்டுச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி