பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு …

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு …

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு … post thumbnail image

பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் இந்திய ரிசர்வ் வங்கியின் முதன்மை பணியாக இருக்கிறது நம் நாட்டில் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் எங்களை சந்தேகிக்க வேண்டாம் என்று கூறினார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் ஆயுதமான வட்டி விகிதம் எங்களிடம் உள்ளது. தற்போதைய நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதைவிட பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவதில் ஈடுபட்டுள்ளோம்.

வட்டி விகிதம் அதிகரிக்கும் முன்பு பணவீக்கம் மற்றும் தொழில் வளர்ச்சி பற்றி புள்ளிவிவரங்கள் வெளியாவதற்காக காத்திருக்கிறோம். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். ரிசர்வ் வங்கியின் அடுத்த காலாண்டு சீராய்வு கூட்டம் ஜனவரி 28ம் தேதி நடைபெறும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி