செய்திகள்,முதன்மை செய்திகள் நோ கமண்ட்ஸ் .. ஹசாரே…

நோ கமண்ட்ஸ் .. ஹசாரே…

நோ கமண்ட்ஸ் .. ஹசாரே… post thumbnail image
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசு பிழைக்குமா என சந்தேகம் எழுப்பினார் அன்னா ஹசாரே. இருந்தபோதிலும் கெஜ்ரிவால் போராடி அரசை காப்பாற்ற வாழ்த்து கூறினார். முன்னதாக காங்கிரஸ் அல்லது பா.ஜ. ஆதரவோடு ஆட்சி அமைத்திருந்தாலும் அது வலுவிழந்த அரசாகவே இருக்கும் என்று கூறியிருந்தார்.

நான் ஏற்கனவே கெஜ்ரிவாலுக்கு டில்லி வெற்றிக்கு பின்னர் வாழ்த்து தெரிவித்துவிட்டதாக அப்போது கூறினார்.பின்னர் டெலிவிஷனில் பேசுகையில் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கட்டும் பின்னர் பார்க்கலாம்.அவர்கள் நல்லவிதமான அரசைதான் அமைப்பார்கள் என நம்புவதாகவும் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்தார்.

அவர்களிடம் லோக் ஆயுக்தா அடிப்படை நடவடிக்கைகளை எப்போது தொடங்குவார்கள் என அவர்களிடம் பேசுவேன் என்றார் ஹசாரே.

தேர்தல் பிரசாரத்திற்கு எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்க மறுத்து விட்ட ஹசரே ஆம் ஆத்மி கட்சியும் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கெஜ்ரிவாலிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். ஊழலை அமல்படுத்தி கெஜ்ரிவால் பெரும்பாண்மையோடு முதல்வராக வேண்டும்.2014 லோக்சபா தேர்தலில் ஒரு வலுவான மூன்றாவது மாற்றாக வாக்காளர்களை கவர்ந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி இருக்க வேண்டும் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி