இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் ஆப்பீள் பெண்ணே …அழகிய உதடே…

ஆப்பீள் பெண்ணே …அழகிய உதடே…

ஆப்பீள் பெண்ணே …அழகிய உதடே… post thumbnail image
என்னதான் அழகாக இருந்தாலும் உதடுகள் சிவப்பாக இருந்த அது இன்னும் கொஞ்சம் ஸ்பெஷல் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி , யாரும் இதற்க்கு விதிவிலக்கல்ல.

உதடுகளை மென்மையாகவும், சிவப்பாகவும் பராமரிக்க சில மிக எளிதான டிப்ஸ் இதோ…

வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகள் அழகாக இருக்கும்.

உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தவும் கூடாது. அவ்வாறு செய்தால் உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

உதடுகள் சிவப்பாக …

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.

வெண்ணெய்யோடு ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாவதுடன் கவர்ச்சியான சிவப்பு நிறத்தையும் பெறும்.

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊறவிட்டு, குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் உதடுகளில் பூசிவர, உதடுகள் மிகவும் மென்மையாகவும், இயற்கையான சிவப்பு நிறத்துடனும் தோற்றமளிக்கும்.வறட்சியினால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் கூட இருந்த இடம் தெரியாமல் மறைந்து சிவப்பாகவும் அழகாகவும் மாறும்
.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி