திரையுலகம்,முதன்மை செய்திகள் அமெரிக்காவுக்கு ஹாய்.. ஷூட்டிங்க்கு பாய் …ஹன்சிகா

அமெரிக்காவுக்கு ஹாய்.. ஷூட்டிங்க்கு பாய் …ஹன்சிகா

அமெரிக்காவுக்கு ஹாய்.. ஷூட்டிங்க்கு பாய் …ஹன்சிகா post thumbnail image
தமிழில் அரண்மனை, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா ஜாலியாக ஊர் சுற்ற அமெரிக்கா பறந்துவிட்டார்.இதற்கிடையில் சிம்புவுடன் காதல் பிரச்னை தலை தூக்கியது. அவரை காதலிப்பதாக இணை் ய தளத்தில் தெரிவித்த ஹன்சிகா ஒரு சில மாதங்களிலேயே அவருடனான காதலை முறித்துக்கொண்டார்.

ஷூட்டிங் டென்ஷன், காதல் பிரச்னைகளால் சோர்வுற்ற ஹன்சிகா திடீரென வெளிநாடு செல்ல முடிவு செய்து தன்னுடன் படித்த தோழிகள் சிலரையும் அழைத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன் அமெரிக்கா பறந்தார்.

நியூயார்க் சென்ற அவர் அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். அங்கு ஓட்டலில் தங்காமல் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் வருடத்துக்கு ஒருமுறை தனது பள்ளி தோழிகளுடன் பொழுதை கழிப்பது ஹன்சிகாவின் பழக்கம். தற்போது அந்த நட்பு அமெரிக்காவரை அவர்களை அழைத்துச் செல்ல வைத்திருக்கிறது. தோழிகளுடன் ஹாலிவுட் ஸ்டுடியோவை சுற்றிப்பார்ப்பதுடன் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்க்கிறார்.

2 வாரங்களுக்கு பிறகு அவர் சென்னை திரும்பியதும் மான் கராத்தே படத்தின் பாடல் காட்சியிலும் தொடர்ந்து தெலுங்கு பட ஷூட்டிங்கிலும் பங்கேற்கிறார். ஆனால் அவர் ஷூட்டிங்கிற்கு பாய் சொல்லிவிட்டு அமெரிக்கா பறந்திருப்பதாக பேசப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி