செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் டாப் 10 பட்டியலில் 9 நிறுவனங்கள்…

டாப் 10 பட்டியலில் 9 நிறுவனங்கள்…

டாப் 10 பட்டியலில் 9 நிறுவனங்கள்… post thumbnail image

தொடக்கத்தில் சரிவுடன் இருந்த நிறுவனங்களின் மதிப்பு:-

மொத்த விலை பணவீக்கம் உயர்வு மற்றும் பாரத ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்புகளால் பங்கு வியாபாரம் தொடக்கத்தில் சரிவை சந்தித்தது. பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை எவ்வித மாற்றமும் செய்யவில்லை. மேலும், அமெரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பு பண அளிப்பு நடவடிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளபோதிலும் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டை அதிகரித்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் மீதமுள்ள நாள்களில் பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது.

டி.சி.எஸ். பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.22,849 கோடி அதிகரித்து ரு.4,15,162 கோடியாக உயர்ந்துள்ளது. இன்ஃபோசிஸ் பங்குகளின் மதிப்பு ரூ.10,247 கோடி உயர்ந்து ரூ.2,03,985 கோடியாக அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு ரூ.9,791 கோடி அதிகரித்து ரூ.2,88,760 கோடியாக உயர்ந்துள்ளது. விப்ரோ பங்குகளின் மதிப்பு ரூ.7,400 கோடி உயர்ந்து ரூ.1,35,342 கோடியாக அதிகரித்துள்ளது.

ஓ.என்.ஜி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.3,294 கோடி அதிகரித்து ரூ.2,43,275 கோடியாக உயர்ந்துள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.2,738 கோடி உயர்ந்து ரூ.1,31,074 கோடியாக அதிகரித்துள்ளது. கோல் இந்தியா பங்குகளின் மதிப்பு ரூ.442 கோடி அதிகரித்து ரூ.1,79,542 கோடியாக உயர்ந்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பங்குகளின் மதிப்பு ரூ.224 கோடி அதிகரித்து ரூ.1,25,527 கோடியாக உயர்ந்துள்ளது. ஐ.டி.சி. பங்குகளின் மதிப்பு ரூ.198 கோடி உயர்ந்து ரூ.2,50,078 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம், எச்.டீ.எஃப்.சி. வங்கிப் பங்குகளின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.6,031 கோடி குறைந்து ரூ.1,59,194 கோடியாக சரிவடைந்துள்ளது.

தற்போது டாப் 10னில் உள்ள நிறுவனங்களின் மதிப்பு:-

பங்குகளின் தற்போதைய சந்தை மதிப்பு அடிப்படையில் டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி. மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் முறையே முதல் நான்கு இடங்களில் உள்ளன. இன்ஃபோசிஸ், கோல் இந்தியா மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி ஆகியவை முறையே ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடங்களை பிடித்துள்ளன. விப்ரோ மற்றும் பார்தி ஏர்டெல் முறையே எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பத்தாவது இடத்தில் உள்ளது.

இவ்வாறாக சென்ற வார பங்கு வர்த்தகத்தில் டாப் 10 பட்டியலில், ஒன்பது நிறுவன பங்குகளின் மதிப்பு ரூ.57,183 கோடி அதிகரித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி