மாணவி கற்பழிப்பு .. மாணவர் கடத்தல் …

விளம்பரங்கள்

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே, தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. அங்கு படிக்கும், மாணவியும், மாணவரும், கடந்த வாரம், நள்ளிரவில், சாப்பிட வெளியே சென்ற போது ஓட்டல் ஒன்றின் வெளியே நின்றிருந்த வேனில் இருந்த ரவுடிகள், மாணவியையும், மாணவரையும் கடத்திச் சென்றனர். பின்னர் ஒதுக்குபுறமான இடத்தில், இருவரையும் தாக்கிய அந்த கும்பல், மாணவியை கற்பழிக்கப் போவதாக மிரட்டியது.

அதை, தடுக்க முயன்ற மாணவரை, மாணவியை கற்பழிக்குமாறு, கத்தியைக் காட்டி மிரட்டினர் . இதில், பயந்த மாணவர், வேறு வழியின்றி, அந்த கும்பல் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, மாணவியுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.இதை, “வீடியோ’வில் படம் எடுத்த அந்த கும்பல், “அந்தப் படத்தை, இணையதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், 25 லட்சம் ரூபாய் தர வேண்டும்’ என, மிரட்டியது.

“வீடியோ’ படம்: “பணத்தை கொண்டு வருகிறேன்’ எனக் கூறி, அவர்களிடம் இருந்து தப்பிய அந்த மாணவி, போலீசில் புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில், போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், எட்டு பேர் கும்பல் சிக்கியது. அவர்கள் வசம் இருந்த, மாணவர் மீட்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர்கள், சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என, போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: