சாதனை படைத்த வீரர்…

விளம்பரங்கள்

ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி நாளில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான், ஆல்–ரவுண்டர் காலிசை எல்.பி.டபிள்யூ. மூலம் வெளியேற்றினார்.ஆனால் டி.வி. ரீப்ளேயில் காலிசுக்கு, பந்து பேட்டின் உள்பகுதியில் உரசிக்கொண்டு அதன் பிறகு காலுறையில் (பேடு) படுவது தெளிவாக தெரிந்தது. இதனை கவனிக்காத நடுவர் ராட் டக்கர் (ஆஸ்திரேலியா) விரலை உயர்த்தி விட்டார். நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.) செய்யும் முறை இருந்திருந்தால் காலிசுக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கும்.

காலிசுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தந்தாலும், ஜாகீர்கானுக்கு இந்த விக்கெட் புதிய மைல்கல்லாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாகீர்கானின் 300–வது விக்கெட் (89 டெஸ்ட்) இதுவாகும். இதன் மூலம் 300 விக்கெட்டுகள் சாய்த்த 4 இந்தியர், ஒட்டுமொத்த அரங்கில் 27–வது வீரர் என்ற சிறப்பை 35 வயதான ஜாகீர்கான் பெற்றார். ஜாகீர்கான் 196 விக்கெட்டுகளை (51 டெஸ்ட்) வெளிநாட்டிலும், 104 விக்கெட்டுகளை (38 டெஸ்ட்) உள்நாட்டிலும் வீழ்த்தி இருக்கிறார்.

டெஸ்டில் 300–க்கு மேல் விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் விவரம் :–

வீரர் விக்கெட் டெஸ்ட்

கும்பிளே 619 132

கபில்தேவ் 434 131

ஹர்பஜன்சிங் 413 101

ஜாகீர்கான் 300 89

டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 வது விக்கெட் சாதனை படைத்த இந்திய வேகப் பந்து வீச்சாளர்களில் ஜாகிர்கானும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: