கிரிக்கெட் மைதானத்தில் பலியான வீரர் …

விளம்பரங்கள்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மூன்றாவது பெரிய நகரம் சுக்கூர் ஆகும். இங்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜின்னா முனிசிபல் ஸ்டேடியத்தில் உள்ளூர் கிரிக்கெட் சங்கங்களான சூப்பர் ஸ்டார் மற்றும் சிந்து யங் அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது.இதில் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணி சார்பில் 22 வயது நிரம்பிய சுல்பிகார் பட்டி இரண்டாவது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரணியின் பந்து வீச்சாளர் வீசிய பந்து நேரடியாக அவரது மார்பைத் தாக்கியுள்ளது. அப்படியே சரிந்து விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுக்கூர் மாகாணத்தில் சுல்பிகார் பட்டி சிறந்த கிரிக்கெட் வீரராக அறியப்பட்டிருந்தார். முதல்தர கிரிக்கெட் மட்டுமே அவரது வாழ்வின் லட்சியமாக இருந்தது. மாநில அளவில் தேர்ச்சி பெற்று பாகிஸ்தான் அணியில் இடம் பிடிக்கவேண்டும் என்று அவர் விருப்பப்பட்டார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷர்ஜில் கான் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றதை அடுத்து சிந்து மாகாணத்தின் உள்புறங்களில் இருக்கும் வீரர்களுக்கும் பாகிஸ்தான் அணியில் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் இந்த போட்டிக்கு முதல்நாள் தெரிவித்தார் என்று சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரியான ரஹ்மத் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: