செய்திகள்,முதன்மை செய்திகள் கைகொடுக்கும் வீட்டு வைத்தியம் …

கைகொடுக்கும் வீட்டு வைத்தியம் …

கைகொடுக்கும் வீட்டு வைத்தியம் … post thumbnail image

இன்றைய அவசர வேளைகளில் தும்மலுக்கு கூட நாம் மருத்துவரைத் தேடி ஓடுகின்றோம். அதனால் பாட்டி வைத்தியம் என்ற ஓன்றே மறைந்துபோனது. பாட்டி வைத்தியம் என்பது பொதுவாகவும், அவசரத்திற்கும் கைகொடுக்கும் ஒன்று.

வெந்தயம், சுண்டக்காய் வத்தல், மிளகு தலா 50 g எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும் .

முழு நெல்லிக்காய் 4, பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டால் ஜீரணக்கோளாறுகள் சரியாகும் .

வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும் .

வெந்தயக்கீரையுடன் பச்சை மிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வில்வ பழத்தின் தோலை சர்க்கரைச் சேர்த்து சாப்பிட்டுவந்தால் குடல் சுத்தமாகும்.

வில்வ மரப்பூக்களை உலர்த்தி பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும் .

வில்வ மரப்பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும் .

முருங்கை கீரை சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவிக்கொண்டால் இருமல் நிற்கும் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி