திரையுலகம்,முதன்மை செய்திகள் இயக்குனரைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்…..

இயக்குனரைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்…..

இயக்குனரைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார்….. post thumbnail image
‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கிய படம், ‘இவன் வேறமாதிரி’ இப்படத்தில் விக்ரம்பிரபு, சுரபி, கிருஷ்ணவம்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லிங்குசாமி தயாரித்து வெளிவந்திருக்கும் இப்படத்தினை யு.டிவி நிறுவனம் டிசம்பர் 13ம் தேதி வெளியிட்ட இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் ரஜினிக்கு என்று இப்படத்தினை பிரத்யேகமாக திரையிட்டு காட்டியிருக்கிறார்கள். படத்தினை பாராட்டி ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில், “‘இவன் வேற மாதிரி’ படத்தைப் பார்த்தேன். ஒரு கிளாஸான ஆக்‌ஷன் படம். இதுவரைக்கும் எந்த படத்திலும் பார்த்திராத படத்தின் உச்சகட்ட காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. நல்ல பொழுதுபோக்கு படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி