நடிகரின் ரசனை …..

விளம்பரங்கள்

மும்பையில் சமீபத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் அமீர்கானிடம் பாலிவுட்டில் செக்ஸியான நடிகை யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அமீர்கான் பாலிவுட்டின் செக்ஸியான நடிகை கங்கனா ரனாவத் என்று கூறினார்.இவர்கள் இருவரும் கஜினி இந்தி படத்தில் நடிக்க இருந்தது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கங்கனாவை தனது படத்தில் நடிப்பதை தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமீர்கான் தன்னை செக்ஸியான நடிகை என்று கூறியது தொடர்பாக புன்னகையுடன் அவர் நல்ல ரசனை கொண்டவர் என்று சுவிட்சர்லாந்தில் இருந்து கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கங்கனா ரனாவத் “ அமீர்கான் மிகவும் அறிவார்ந்த மனிதன். அவர் பெண்கள் செக்ஸியாக இருப்பது குறித்து வாழ்த்து தெரிவிக்க தெரிந்து வைத்திருக்கிறார். அவருடைய பாராட்டை நான் எற்றுக் கொள்கிறேன். அவருடைய பாராட்டு என்னை தன்னைதானே ஊக்குவிக்கிறது. அவருக்கு நல்ல ரசனை உள்ளது என்று நான் எண்ணுகிறேன்” என்று கூறியுள்ளார்.

அமீர்கானின் இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட கங்கனா ரனாவத், தான் செக்ஸியாக உள்ளதாக உணர்வதாக கூறியுள்ளார். மேலும், பாலிவுட்டில் தீபிகா படுகோன் மிகவும் செக்ஸியானவர் என்று கூறியுள்ளார். அவரை எனக்கு பிடிக்கும். நான் அவருடைய படங்களை எல்லாம் பார்க்கும் போது, அவருடைய அந்த அழகான பெரிய கண்கள் பின்னால் உணர்ச்சி வயப்படுவதாக கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: