தன்னிறைவு பெற்ற இந்தியா…..

விளம்பரங்கள்

இந்தியாவின் பாதுகாப்பு துறை தற்சார்பு தன்மை உடையதாக மாறி வருகிறது. அதற்கு உதாரணம் இன்று நடைபெற்ற தேஜஸ் விமான சாகசம். தேஜஸ் விமானம் வெற்றி அடைந்திருப்பதன் மூலம் இத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐந்து நாடுகளுடன் இலகுரக அதிவேக சிறப்பு விமானங்களை உடைய நாடு என்ற சிறப்பை இந்தியாவும் பெறுகிறது. 2015 முதல் பாதுகாப்பு படைகளின் தேவைகளுக்கு தகுந்தவாறு உடனடியாக தயாரிப்பு பணி துவங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார்.

பெங்களூரில் தேஜஸ் இலகு ரக போர் விமானத்தை படையில் சேர்ப்பதற்கான ஆரம்பக்கட்ட அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக போர் விமானமான தேஜஸ், 7 ஆயிரம் கோடி மைல்கள் பறந்து முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது கட்ட பயணத்தில் தேஜஸ் விமானம் ஆயுதங்களுடன் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது. விண்ணில் பறக்கும்போதே தரையில் உள்ள இலக்கின் மீது ஆயுதங்களை வீசி தாக்குவது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக தாண்டியது. இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் தேஜஸ் விமானத்துக்கு ஆரம்பக்கட்ட இயக்க அனுமதி சான்று &2 வழங்கப்பட்டது.

இந்த தேஜஸ் விமானத்துக்கு ஆரம்பக்கட்ட இயக்க அனுமதி சான்று &2வை விமான தளபதி நாக் பிரோனியிடம் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி வழங்கினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி