மர்ம நபர்களின் விளையாட்டு …

விளம்பரங்கள்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜார்ஜியாவில் ஒரு பிரபல பல்பொருள் அங்காடியில் இருந்த டாய்லெட் சீட்டுகள் அனைத்திலும் யாரோ மர்ம நபர்கள் பசையை ஒட்டவைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் அந்த கடைக்கு சென்ற ஒரு பெண் இயற்கை உபாதையை கழிக்க அந்த டாய்லெட் சீட்டில் உட்கார்ந்து இருக்கிறார்.
பசையிருப்பது தெரியாது அவசரத்தில் உட்கார்ந்த அவரால் பின்னர் எழுந்திருக்க முடியவில்லை. இச்செய்தி நிர்வாகத்திற்கு தெரியவர அவர்கள், அவசர அவசரமாக மருத்துவ உதவியை நாடினர்.

பின்னர் அங்கு வந்த மருத்துவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள கெயினெஸ்வில்லே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அப்பகுதிகளில் ஸ்டோர் நிர்வாகி சோதனை நடத்தினார். அப்போது அங்குள்ள ஒரு டாய்லெட்டின் ஓரத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பசைப்பை ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வழக்கு பதிந்த போலிசார் இந்த விபரீத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: