அமெரிக்க நிறுவனத்தின் நக்கல் …

விளம்பரங்கள்

அமெரிக்க,ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் பீர் பாட்டில்களில் இந்து கடவுள்களின் புகைப்படங்களை போட்டு சர்ச்சையில் சிக்கின. பின்னர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஆஷ்வில் ப்ரூயிங் கம்பெனி புது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த நிறுவனம் தயாரித்துள்ள பீர் ஒன்றுக்கு இந்து கடவுளான சிவனின் பெயரை வைத்து சிவா பீர் என்ற பெயரில் விற்பனை செய்கிறது. மேலும் பீர் பாட்டிலில் சிவன் நடராஜர் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை ஒட்டியுள்ளது.

பீருக்கு சிவனின் பெயரை வைத்து அவரின் புகைப்படத்தை ஒட்டியுள்ளதற்கு இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இந்து அரசியல் தலைவர் ராஜன் ஜெட் கூறுகையில், இந்து மதத்தில் சிவன் போற்றப்படும் தெய்வம். அவரை கோவில்களிலும், பூஜை அறைகளிலும் வைத்து பூஜிக்க வேண்டுமே தவிர வியாபார பேராசையால் அவரது பெயரையும், படத்தையும் பீருக்கு பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி