திரையுலகம்,முதன்மை செய்திகள் புலம்பும் .நயன்தாரா …

புலம்பும் .நயன்தாரா …

புலம்பும் .நயன்தாரா … post thumbnail image
தமிழில் தற்போது அதிகமான படங்களில் நடிக்கும் நடிகைகள் லட்சுமிமேனன்-ஸ்ரீதிவ்யா.இதில் லட்சுமிமேனன் நடித்த சிலபடங்கள் ஹிட் என்பதால், விஷால், சித்தார்த், விமல் போன்ற நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி, அடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் ஒரு படத்திற்கும் அவரிடம் கால்சீட் கேட்டுள்ளார்களாம்.

மேலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த ஒரு படத்தின் ஹிட்டே வரிசையாக படங்கள் புக்காகி விட்டன. ஆனால் நயனின் மார்க்கெட் ஒன்றும் பெரிய அளவில் இல்லாததால் 20 லட்சத்தில் நடிப்பதற்கே இந்த நடிகைகள் தயராக இருக்கிறபோது, நயன்தாராவை எதற்காக 2 கோடி கொடுத்து புக் பண்ண வேண்டும் என்று பின்வாங்கி கொண்டிருக்கிறார்களாம்.

இதனால், அரை டஜன் படங்களில் நடிக்க வேண்டிய நயன்தாரா தற்போது இரண்டு படங்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனால் தனது வளர்ச்சிக்கு இந்த புதிய வரவு நடிகைகள் பெரிய இடையூறாக இருப்பதாக புலம்புகிறார் நயன்தாரா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி