49ஒ ஹீரோ கவுண்டர்…

49ஒ ஹீரோ கவுண்டர்… post thumbnail image
இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி. 12 படங்களில் ஹீரோவாக நடித்து, அவற்றில் சில படங்கள் நூறு நாட்களையும் தாண்டின. பல படங்களில் ஹீரோ என வேறு யார் பெயர் இருந்தாலும், கவுண்டர்தான் படத்தின் நிஜ நாயகனாக ஆதிக்கம் செலுத்தியிருந்தார்.

தங்கம் படத்துக்குப் பிறகு இப்போதுதான், சாந்தனுவுடன் ‘வாய்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கவுண்டமணி. அதைத் தொடர்ந்து ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த ஆரோக்கியதாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ’49ஓ’ என பெயர் வைத்திருக்கிறார்கள். இதில், விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கவுண்டமணி. அவருடன் சத்யன், விடிவி கணேஷ், சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கிறார்கள். இது விவசாயிகள் பிரச்சினைகளைப் பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வெற்றி மாறன் தயாரிக்கும் ஒரு படத்திலும் ஹீரோவாக நடிக்க கவுண்டமணி ஒப்புக் கொண்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி