சூப்பர் ஸ்டாரின் பணிவு -சச்சின் …

விளம்பரங்கள்

என்டிடிவி தனது 25வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது 25 கிரேட்டஸ்ட் இந்தியர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. இந்த 25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் விருது பெற்றவர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 25 பேருக்கும் விருது வழங்கி கௌரவித்தார்.விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் சச்சின் டெண்டுல்கரிடம் சென்று அவரிடம் பேசினார்.

இது குறித்து சச்சின் கூறுகையில், ரஜினி என்னிடம் வந்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவரது பணிவை பார்த்து அப்படியே அசந்து போய்விட்டேன். எனது பாராட்டுக்குரிய நபர் அவர் என்று நெகிழ்ந்தார் சச்சின்.

ரஜினிகாந்த் கிரிக்கெட் பார்ப்பார் என்பது தெரிந்து மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி உள்பட பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் பற்றி பேசினோம் என்றார் சச்சின்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: