மீண்டும் கடவுள்கள் அவமதிப்பு …

விளம்பரங்கள்

டிசம்பர் 12–ந் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் சென்னையில் பல இடங்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டினர்.

ஒரு போஸ்டரில் உள்ள படத்தில், ரஜினிகாந்த் அவரது மனைவி, மகளுடன் வாக்குச்சாவடியில் ஓட்டுபோடுவது போலவும், ஓட்டு போடுவதற்கு நிற்கும் ரசிகர் வரிசையில் விநாயகர், விஷ்ணு கடவுள்களும் காத்து நிற்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

ரஜினி ரசிகர் போர்வையில் மாற்று மதத்தினர் இதன் பின்னணியில் உள்ளதுபோல் தெரிகிறது. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கலெக்டர் மாநாட்டில் கூறியுள்ளதுபோல், மத மோதலைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.என விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: