மிக சிறந்த மனிதர் ரஜினி…

விளம்பரங்கள்

பிரபல செய்தி சேனலான என்.டி.டிவி தொடங்கி 25 வருடமாகிறது ,அதன் வெள்ளி விழாவையொட்டி நாட்டின் சிறந்த மனிதர்கள் யார் யார் என ஒரு கருத்து கணிப்பை ஆன்லைனில் நடத்தியது.

அதில் தமிழகத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசை புயல் எ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதற்கான விழாவில் ஜனாதிபதி அவர்கள் நாட்டின் சிறந்த மனிதர்களுக்கு விருதுகள் வழங்கினர்.

விருதை பெற்றுக்கொண்ட ரஜினி பேசுகையில் ,மனிதனின் வாழ்வில் எப்போதாவது அற்புதம் நிகழும் ஆனால் என் வாழ்வில் அது அடிக்கடி நிகழும் இல்லையெனில் சாதாரண பஸ் கண்டக்டர் ஆக இருந்த நான் இவ்வளவு பெரிய மனிதர்கள் முன் நிற்க முடிந்தது என்றால் இது எவ்வளவு அற்புதமான விஷயம் .

இந்த சந்தர்பத்தில் உறுதுணையாக இருந்த என் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட் என் குருநாதர் கே.பாலசந்தர் அவர்களுக்கும் என் அன்பார்ந்த தமிழக ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: